தமிழ்த்
தாய் வாழ்த்து :
காதொளிரும் குண்டலமும், கைக்கு வளை
யாபதியும், கருணை மார்பின்
மீதொளிர்ச்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !
- கவியோகி சுத்தானந்த பாரதி
