Monday, August 16, 2021

ஆவணி இதழ் -கீழறை (பிலவ) ஆண்டு (ஆகஸ்ட் 2021)

 நல்வரவு

( இந்த இரண்டு பக்க இதழை தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும்.) 

இந்த ஆவணி இதழில்  இரண்டு சாதனையாளர்களை  பார்க்கப் போகிறோம்.

முதலாமவர்  இயற்கை விவசாயத்தை கடைபிடிக்கும் ஒரு மூதாட்டி, 105 வயதானவர். இன்னமும் அன்றாடம் வயல்களில் இறங்கி மண்வெட்டி பிடித்து  வேலை செய்வதில் ஆர்வமுள்ளவர். அவர் பெயர் பாப்பம்மாள் எனும் ரங்கம்மாள்.. கோவை அருகே தேக்கம்பட்டி கிராமத்திற்கு பெருமை சேர்த்தவர்.


        இரண்டாமவர் தொழில்நுட்ப வல்லுநர். தொழிலதிபர்.  இவரது நிறுவனம்  உலக அளவில் மென்பொருள் உருவாக்குவதில் தனிஇடம் பிடித்திருக்கிறது. ஆனால் இவரது வல்லுனர்கள் பெரும்பாலும் இவர்களாலேயே தனிப்பயிற்சி அளிக்கப்பட்ட புறநகர் பகுதியை சேர்ந்த  இளைஞர்கள்.   அவர்தான்  ZOHO நிறுவனத்தின்  தலைவர் ஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு. அவருடனான ஓர்நேர்காணல்.



இரண்டாம் பக்கத்தில் காணப்போகும் இடம்  தாராசுரம். அதியற்புதமான சிற்பங்களை உடைய பழமையான கோவில்.  சிற்பிகளின் கனவு என்றுப் போற்றப்படும் அழகு வாய்ந்த கோவிலின் விவரங்களை அறியலாம். கும்பகோணம் தஞ்சாவூர்  சாலையில் உள்ளது.

 

மூன்றாம் பகுதியான வாழ்க்கை நெறியில் இம்மாதம் முதல் பழமொழிக் கதைகள்  இடம் பெறும். இது  வீட்டில் இருக்கும் இளைய சமுதாயத்திற்கு தமிழ் மொழியின் அழகையும் அதே சமயத்தில்  அதன் பின் உள்ள ஆழ்ந்த கருத்துகளை எடுத்துச் சொல்ல ஒரு கருவியாகவும்  பயன்படும் என்கிற நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

இம்மாத பழமொழி :  ஆழம் அறியாமல் காலை விடாதே    

வாசகர்கள் தங்கள் மேலான கருத்துகளை பின்னூட்டம் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமோ தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment

வைகாசி ஆனி ஆடி -நற்செய்கை (சுபகிருது) -2022

  நல்வரவு  வைகாசி இதழ் தரவிறக்கம்      1) பத்திரிகை ஜாம்பவான் ஜி  சுப்பிரமணி ஐயர்  2)  ஆடுதுறை -நெல் ஆராய்ச்சி மையம்  3)  தன்வினை தன்னைச்சுட...