Monday, February 14, 2022

தை கீழறை (பிலவ) ஆண்டு, ஜனவரி 2022

 நல்வரவு

தை  மாத இதழை தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும். 

1 ) இந்த இதழில் முதல் பக்க சாதனையாளர்  புதுச்சேரியின் திரு கேசவசாமி.



பள்ளித்தலைமை ஆசிரியரும் தமிழ் ஆசிரியருமான இவர் ஏழு முறை இந்திய அரசால் ஜனாதிபதி விருதுகள் வெவ்வேறு காரணங்களுக்காக வழங்கப்பட்டுள்ளார்.  சமீபத்தில்  பத்மஸ்ரீ விருது பொம்மலாட்டக்கலைக்கு புத்துயிர்  கொடுத்த பெருமைக்காக வழங்கப்பட்டது.  மனித நேயம் மிகுந்த இவர் பசித்தவர்களின் பசியாற்றுவதையே தம் குறிக்கோளாக கொண்டவர். தற்போது முற்றிலும் இலவசமான முதியோர் இல்லத்தை பராமரிப்பதிலும் இளம் தலைமுறையினருக்கு இலவச பொம்மலாட்டக் கலையை சொல்லிக்கொடுப்பதிலும் தன்னுடைய சமூக சேவையை சிறப்பாக ஆற்றிவரும் அவருக்கு வேரும் தளிரும் தன்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. 

2) குமரி மாவட்டத்தில் பன்னிரெண்டு சிவாலயங்களை மகா சிவராத்திரி அன்று  ஓடிச் சென்றே வழிபடும் சிவாலய ஓட்டம் புகழ் பெற்றது.  இதில் கடக்க வேண்டிய தூரம் 110 கிமீ. அதன் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி இவ்விதழில் படிக்கலாம். 

3)  பழமொழிக் கதை : ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.  

No comments:

Post a Comment

வைகாசி ஆனி ஆடி -நற்செய்கை (சுபகிருது) -2022

  நல்வரவு  வைகாசி இதழ் தரவிறக்கம்      1) பத்திரிகை ஜாம்பவான் ஜி  சுப்பிரமணி ஐயர்  2)  ஆடுதுறை -நெல் ஆராய்ச்சி மையம்  3)  தன்வினை தன்னைச்சுட...