Saturday, May 15, 2021

வைகாசி இதழ் ; கீழறை ஆண்டு 2021

    இந்த இதழில்  ஒரு அதிசய மனிதரைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் உலகை சுற்றிய இவர் அனுபவங்கள் மிகவும் அற்புதமானவை. சுத்த சைவர். அன்றைய ஐரோப்பிய அமரிக்க தேசங்களில் கப்பல் பயணம் செய்து  அத்தனை பிரபலத் தலைவர்களையும் தம் புகைப்பட கருவியிலும், திரைப்படக் கேமிராவிலும் படம் எடுத்திருக்கிறார் என்பதை கேட்பதற்கே வியப்பாக இருக்கிறதுஅவர் எப்படி தேசப்பற்று மிக்கவராக இருந்தார் , சமுதாய அமைப்பு அரசாங்கத்தின் பொறுப்பு , மக்களின் கடமை இவற்றை பற்றி எல்லாம் கூட தெளிவான சிந்தனை இருந்திருக்கிறது என்பதை படிக்கும் போது தமிழராகிய நமக்கு பெருமையாக இருக்கிறது.

       இரண்டாவது பக்கத்தில் இந்தியாவிலேயே உள்ள தனித்தன்மை வாய்ந்த ஒரு அருங்காட்சியகம் , கோவை நகரத்தில்  அனைத்துத் தர மக்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பூச்சிகள் பற்றிய  அறிவியல் கண்காட்சியகம்.  

      வாழ்க்கை நெறியில் குமரகுருபரர் சொல்லும் முக்கிய கருத்து கல்வி  கற்பதை மட்டும்     எக்காலத்திலும் கைவிடக்கூடாது.    ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மனிதர்கள் ஒப்பீடு செய்து   கொள்ளலாம், தம்மை விட அதிகம் கற்றவர்   அல்லது  திறமைப் பெற்றவர்களை கண்டு தாமும் அவர் போல் ஆக வேண்டும்   என்று  ஆவல் கொள்ள  வேண்டுமே அன்றி பிறர் செல்வ வளத்தைக் கண்டு அல்ல என்பதை காரணத்தோடு விளக்குகிறார்.

தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும் 

Wednesday, May 5, 2021

அஞ்சலி -திரு V கல்யாணம்

 சித்திரை மாத வேரும் தளிரும் இதழில் நாம் மிகவும் போற்றக்கூடிய  ஒரு காந்தீயவாதியாகக் கண்ட திரு V. கல்யாணம்   மே 4 ஆம் தேதி செவ்வாய் அன்று தமது 99 தாவது வயதில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்  பகிர்ந்து கொள்கிறோம்.

அன்னாருக்கு நமது இதயபூர்வ அஞ்சலிகள்.

அவருடைய வாழ்க்கை தேசபக்தர்களுக்கு ஒரு முன் மாதிரி. அவர் வழியில் நடக்க யாவரும் உறுதி பூணுவோம்.

  


வைகாசி ஆனி ஆடி -நற்செய்கை (சுபகிருது) -2022

  நல்வரவு  வைகாசி இதழ் தரவிறக்கம்      1) பத்திரிகை ஜாம்பவான் ஜி  சுப்பிரமணி ஐயர்  2)  ஆடுதுறை -நெல் ஆராய்ச்சி மையம்  3)  தன்வினை தன்னைச்சுட...