Friday, July 16, 2021

ஆடி -இதழ் :கீழறை ஆண்டு -2021

  குறிப்பு :  PDF கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ள  இங்கே சுட்டவும். 

முன்னோட்டம் :

நல்வரவு 

1) பாரம்பரிய கலைகளை மீட்டு எடுப்பவர் -திரு கனகராஜ் 

பாரம்பரிய நாட்டுக் கலைகள் குறிப்பாக -நடன மற்றும் நாடகக் கலை -அருகி வருகின்றது. இதற்கு காட்சி ஊடகங்கள் திரைப்படங்களின் ஆட்சி முக்கிய காரணம் என்பதில் பலருக்கு உடன்பாடு உண்டு. 

ஆனாலும் இன்றும் கோவில் திருவிழாக்களில் சம்பிரதாயமாக கடைபிடிக்கப் பட்டு கொண்டிருப்பதால் ஓரளவு இவை உயிர்ப்புடன் இருக்கின்றன. இந்நிலையில் இவற்றை மீட்டெடுத்து ஜனரஞ்சகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தலைமை ஆசிரியர் திரு கனகராஜ்.  குறிப்பாக  இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.  கண்ணைக் கவரும் வகையில் பாரம்பரிய  ஆடைகளை  அணிந்து நூற்றுக்கணக்கில்  அவர்கட்கு ப்பயிற்சி அளித்து அரங்கேற்றம் செய்யும் போது ஒரு புது பரிமாணம் தெரிய வருகிறது.

2) தெரிந்த ஊர் தெரியாத விஷயம் 

ஆயிரம் வருட பழமை வாய்ந்த  சமண குடைவரைக் கோவில் நாகர்கோவில் மாவட்டத்தில் மார்த்தாண்டம் அருகே சிதறால் என்ற கிராமத்தில் உள்ளது.

அதைப்பற்றிய காணொளியை இங்கே காணலாம் 


3) வாழ்வு நெறி பற்றி பேசும் போது தமிழர் பாரம்பரியத்தை எப்படி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது என்பது ஒரு சவாலாகவே இருக்கிறது. நம்முடைய எண்ணியல் வழக்கு ஒழிந்து விட்டது. முகத்தல் அளவு,  நீள அகல  பரப்பளவு அளவை முறைகள் யாவும் சென்ற நூற்றாண்டில் மாற்றம் அடைந்து விட்டன.  இளம் தலைமுறையினருக்கு  தமிழரின் சிறப்பான  கால அட்டவணையும் கூட  தெரியாமல் போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதை ஒரு நாட்காட்டி கொண்டு எப்படி நாம் அவர்களை பயிற்றுவிக்க முடியும் என்பது ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

அனைத்தையும் விவரமாக அறிய ஆடி இதழை தரவிறக்கம் செய்து கொண்டு படியுங்கள்.  உங்களுடைய மேலான கருத்துகளை பின்னூட்டம் மூலம் தெரிவிக்கவும். நன்றி,

வாழ்க வளர்க 

No comments:

Post a Comment

வைகாசி ஆனி ஆடி -நற்செய்கை (சுபகிருது) -2022

  நல்வரவு  வைகாசி இதழ் தரவிறக்கம்      1) பத்திரிகை ஜாம்பவான் ஜி  சுப்பிரமணி ஐயர்  2)  ஆடுதுறை -நெல் ஆராய்ச்சி மையம்  3)  தன்வினை தன்னைச்சுட...