( இந்த இரண்டு பக்க இதழை தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும்.)
1) இம்மாத சாதனையாளர் தமிழகத்தின் தங்கமகன் எனப் போற்றப்படும் மாற்றுத் திறனாளி திரு மாரியப்பன்
பலப் பல இன்னல்களைத் தாண்டி அவர் எப்படி ஒரு சாதனையாளர் ஆனார் என்பது பலருக்கும் ஊக்கமளிக்கும் ஒரு வரலாறு
2) உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடு தமிழ்நாட்டில் உள்ளது. அதன் விசேஷத் தன்மை சுற்றுப்புற சூழலுக்கு அதன் அவசியம் பற்றி இந்த இதழில் தெரிந்து கொள்ளலாம்.
3) தமிழ் கருவூலம் பகுதியில் இம்மாதம் ஒரு பஞ்சதந்திரக் கதை :
பழமொழி : ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
தரவிறக்கம் செய்த கோப்பை அதிக தமிழ் நண்பர்களோடு சமூக வலைத் தளங்களில் பகிரவும்.
( இந்த இரண்டு பக்க இதழை தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும்.)
இந்த ஆவணி இதழில் இரண்டு சாதனையாளர்களை பார்க்கப் போகிறோம்.
முதலாமவர் இயற்கை விவசாயத்தை கடைபிடிக்கும் ஒரு மூதாட்டி, 105 வயதானவர். இன்னமும் அன்றாடம் வயல்களில் இறங்கி மண்வெட்டி பிடித்து வேலை செய்வதில் ஆர்வமுள்ளவர். அவர் பெயர் பாப்பம்மாள் எனும் ரங்கம்மாள்.. கோவை அருகே தேக்கம்பட்டி கிராமத்திற்கு பெருமை சேர்த்தவர்.
இரண்டாமவர் தொழில்நுட்ப வல்லுநர். தொழிலதிபர். இவரது நிறுவனம் உலக அளவில் மென்பொருள் உருவாக்குவதில் தனிஇடம் பிடித்திருக்கிறது. ஆனால் இவரது வல்லுனர்கள் பெரும்பாலும் இவர்களாலேயே தனிப்பயிற்சி அளிக்கப்பட்ட புறநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள். அவர்தான் ZOHO நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு. அவருடனான ஓர்நேர்காணல்.
இரண்டாம் பக்கத்தில் காணப்போகும் இடம் தாராசுரம். அதியற்புதமான சிற்பங்களை உடைய பழமையான கோவில். சிற்பிகளின் கனவு என்றுப் போற்றப்படும் அழகு வாய்ந்த கோவிலின் விவரங்களை அறியலாம். கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் உள்ளது.
மூன்றாம் பகுதியான வாழ்க்கை நெறியில் இம்மாதம் முதல் பழமொழிக் கதைகள் இடம் பெறும். இது வீட்டில் இருக்கும் இளைய சமுதாயத்திற்கு தமிழ் மொழியின் அழகையும் அதே சமயத்தில் அதன் பின் உள்ள ஆழ்ந்த கருத்துகளை எடுத்துச் சொல்ல ஒரு கருவியாகவும் பயன்படும் என்கிற நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இம்மாத பழமொழி : ஆழம் அறியாமல் காலை விடாதே
வாசகர்கள் தங்கள் மேலான கருத்துகளை பின்னூட்டம் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமோ தெரிவிக்கலாம்.
வேரும் தளிரும் முதல் வருட இதழ்கள் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது.
இதை வெளியிட முன்வந்தவர்கள் C C G S (Chennai Centre for Global Studies ) என்கிற அமைப்பு. இது புலம் பெயர்ந்த தமிழர்களின் இணைப்பிற்கு ஒரு பாலமாக செயலாற்றி வருகிறது. அதன் ஒரு அங்கமாக இப்புத்தக வடிவம் தமிழர் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் முயற்சியில் முதற்கட்டமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
C CG S பற்றி மேலும் அறிய ( https://www.chennaicgs.org/accomplishments )
விளம்பி வருட இதழ்களை புத்தக வடிவில் படிக்க விரும்புவர்கள் பிரசுரகர்தர்களை info@chennaicgs.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த வலைப்பூவில் படிக்க விரும்புவர்கள் மேலே உள்ள படத்தை சுட்டினால் போதும். Google Drive பக்கத்திலிருந்து ஒவ்வொரு இதழாகப் பார்த்து வேண்டியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மிக அழகாக வர்ணப் பக்கங்கங்களுடன் கண்ணைக் கவரும் வகையில் அச்சடித்திருப்பது பாராட்டுக்குரியது.
1) பாரம்பரிய கலைகளை மீட்டு எடுப்பவர் -திரு கனகராஜ்
பாரம்பரிய நாட்டுக் கலைகள் குறிப்பாக -நடன மற்றும் நாடகக் கலை -அருகி வருகின்றது. இதற்கு காட்சி ஊடகங்கள் திரைப்படங்களின் ஆட்சி முக்கிய காரணம் என்பதில் பலருக்கு உடன்பாடு உண்டு.
ஆனாலும் இன்றும் கோவில் திருவிழாக்களில் சம்பிரதாயமாக கடைபிடிக்கப் பட்டு கொண்டிருப்பதால் ஓரளவு இவை உயிர்ப்புடன் இருக்கின்றன. இந்நிலையில் இவற்றை மீட்டெடுத்து ஜனரஞ்சகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தலைமை ஆசிரியர் திரு கனகராஜ். குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். கண்ணைக் கவரும் வகையில் பாரம்பரிய ஆடைகளை அணிந்து நூற்றுக்கணக்கில் அவர்கட்கு ப்பயிற்சி அளித்து அரங்கேற்றம் செய்யும் போது ஒரு புது பரிமாணம் தெரிய வருகிறது.
2) தெரிந்த ஊர் தெரியாத விஷயம்
ஆயிரம் வருட பழமை வாய்ந்த சமண குடைவரைக் கோவில் நாகர்கோவில் மாவட்டத்தில் மார்த்தாண்டம் அருகே சிதறால் என்ற கிராமத்தில் உள்ளது.
அதைப்பற்றிய காணொளியை இங்கே காணலாம்
3) வாழ்வு நெறி பற்றி பேசும் போது தமிழர் பாரம்பரியத்தை எப்படி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது என்பது ஒரு சவாலாகவே இருக்கிறது. நம்முடைய எண்ணியல் வழக்கு ஒழிந்து விட்டது. முகத்தல் அளவு, நீள அகல பரப்பளவு அளவை முறைகள் யாவும் சென்ற நூற்றாண்டில் மாற்றம் அடைந்து விட்டன. இளம் தலைமுறையினருக்கு தமிழரின் சிறப்பான கால அட்டவணையும் கூட தெரியாமல் போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை ஒரு நாட்காட்டி கொண்டு எப்படி நாம் அவர்களை பயிற்றுவிக்க முடியும் என்பது ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
அனைத்தையும் விவரமாக அறிய ஆடி இதழை தரவிறக்கம் செய்து கொண்டு படியுங்கள். உங்களுடைய மேலான கருத்துகளை பின்னூட்டம் மூலம் தெரிவிக்கவும். நன்றி,
நாயுடுவின்
கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிகள் அனந்தம். ஆரஞ்சுப்பழம் கசக்கும்! அதனால் பதினைந்து இருபது
பங்கு அந்த பழச்சாற்றில் 15 அவுன்ஸ் அளவுக்கு தண்ணீர்
கலந்தால் இனிக்கும் அதாவது பதினைந்து இருபது பழங்களின் சாற்றை ஒன்றில் கிடைக்கச்
செய்கிறார் நாயுடு. அவருடைய தோட்டத்தில் பருத்திச் செடி 24 ராத்தல் பருத்தியை காய்க்கிறது. இது சராசரி நம்
நாட்டில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் மொத்த விளைச்சலுக்கு ஆறு அல்லது ஏழு பங்கு. சோளச் செடி பதினெட்டு அடி உயரம். தலைநிமிர்ந்து எண்ணினால் 36 முதல் 39 கதிர்கள். இப்படி தாவரங்களும் பேசுகின்றன. இந்த இயந்திர மனிதரை நோபல் பரிசு பெற்ற நம் இந்திய விஞ்ஞானி சர் சி
வி ராமன் முதல் ஆங்கில மண் ஆராய்ச்சி நிபுணர் சர் ஜான் ரஸ்ஸல் ஈடாக, கண்டு வியக்கின்றனர்.......( மேலும் படிக்க )
இந்த இதழில் ஒரு அதிசய மனிதரைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் உலகை சுற்றிய இவர் அனுபவங்கள் மிகவும் அற்புதமானவை. சுத்த சைவர். அன்றைய ஐரோப்பிய அமரிக்க தேசங்களில் கப்பல் பயணம் செய்து அத்தனை பிரபலத் தலைவர்களையும் தம் புகைப்பட கருவியிலும், திரைப்படக் கேமிராவிலும் படம் எடுத்திருக்கிறார் என்பதை கேட்பதற்கே வியப்பாக இருக்கிறதுஅவர் எப்படி தேசப்பற்று மிக்கவராக இருந்தார் , சமுதாய அமைப்பு அரசாங்கத்தின் பொறுப்பு , மக்களின் கடமை இவற்றை பற்றி எல்லாம் கூட தெளிவான சிந்தனை இருந்திருக்கிறது என்பதை படிக்கும் போது தமிழராகிய நமக்கு பெருமையாக இருக்கிறது.
இரண்டாவது பக்கத்தில் இந்தியாவிலேயே உள்ள தனித்தன்மை வாய்ந்த ஒரு அருங்காட்சியகம் , கோவை நகரத்தில் அனைத்துத் தர மக்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பூச்சிகள் பற்றிய அறிவியல் கண்காட்சியகம்.
வாழ்க்கை நெறியில் குமரகுருபரர் சொல்லும் முக்கிய கருத்து கல்வி கற்பதை மட்டும் எக்காலத்திலும் கைவிடக்கூடாது. ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மனிதர்கள் ஒப்பீடு செய்து கொள்ளலாம், தம்மை விட அதிகம் கற்றவர் அல்லது திறமைப் பெற்றவர்களை கண்டு தாமும் அவர் போல் ஆக வேண்டும் என்று ஆவல் கொள்ள வேண்டுமே அன்றி பிறர் செல்வ வளத்தைக் கண்டு அல்ல என்பதை காரணத்தோடு விளக்குகிறார்.
சித்திரை மாத வேரும் தளிரும் இதழில் நாம் மிகவும் போற்றக்கூடிய ஒரு காந்தீயவாதியாகக் கண்ட திரு V. கல்யாணம் மே 4 ஆம் தேதி செவ்வாய் அன்று தமது 99 தாவது வயதில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.
அன்னாருக்கு நமது இதயபூர்வ அஞ்சலிகள்.
அவருடைய வாழ்க்கை தேசபக்தர்களுக்கு ஒரு முன் மாதிரி. அவர் வழியில் நடக்க யாவரும் உறுதி பூணுவோம்.