Friday, April 15, 2022

சித்திரை, நற்செய்கை (சுபகிருது) -ஏப்ரல் 2022

 வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

நற்செய்கை என்ற பெயரில் வரும் இந்த புத்தாண்டு அனைத்தையும் நல்லனவற்றையே தரும் என்று நம்புவோமாக.

இந்த இதழில் வேரும் தளிரும் தனது ஐந்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. 

வழக்கமான பகுதிகளை அப்படியே தொடர்வோம். தரவிறக்கம் செய்து கொண்டு முழு கட்டுரைகளையும் படிக்கலாம்.

1) முகப்பக்கத்தில் சாந்தி சமூக சேவை  நிறுவனத்தின் தொண்டுகளை சிறப்பாக வடிவமைத்த திரு பி.சுப்பிரமணியன் பற்றியது.


தொழிலதிபர்களும் அன்றாட மக்களின் தேவையை புரிந்து கொண்டு தமது செல்வத்தை பங்கிட்டு கொள்ள முன் வருவதை திரு சுப்பிரமணியத்தின் சேவை அமைப்பின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

2) தெரிந்த ஊர் தெரியாத விஷயத்தில் திருச்சியில் உள்ள மங்கம்மாள் அரண்மனை பற்றிய வரலாற்றை படிக்கலாம்.


3)  இந்த மாதத்து  பழமொழிக் கதை  " கற்றது கைமண் அளவு"

தவறாமல் உங்களுடைய மேலான கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்.


பங்குனி .கீழறை (பிலவ) ஆண்டு, மார்ச் 2022

 நல்வரவு

இம்மாத வேரும் தளிரும் இதழை முழுவதுமாகப் படிக்க தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

1) முகப்பக்கம் -சாதனையாளர் :  

புதுச்சேரி  திரு வி.கே  முனுசாமி -சுட்டமண் கைவினை கலைஞர். பல புதுமைகளை புகுத்தி  50 அடி உயரமுள்ள வடிவங்களை பிரித்து அடுக்கும் முறையில் வெற்றிகரமாக சுட்ட மண்ணில் செய்து காட்டுபவர். 



2)   தெரிந்த ஊர் தெரியாத விஷயத்தில் நீங்கள் படிக்கப்போவது "மாட்டு வைத்தியர் மாதேஸ்வரர்" - மேட்டுப்பாளையம் அருகே குட்டையூர்.


3) பழமொழி கதையில் காணப்போவது " நிறைகுடம் தளும்பாது"

மறக்காமல் பின்னூட்டங்கள் மூலம் உங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளுங்கள்.

Monday, February 14, 2022

மாசி, கீழறை (பிலவ) ஆண்டு பிப்ரவரி 2022

 நல்வரவு

மாசி மாத இதழில் நாம் சந்திக்க இருக்கும் நபர் பத்ம பூஷண் திரு நாகசாமி. இந்திய தொல்லியியல் துறையில் அவர் ஆற்றிய அரும் பணியை அறிந்து கொள்ள  இம்மாத வேரும் தளிரும் இதழை தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும்

அவருடன்  ஒரு நேரடி காணலை கீழ்கண்ட காணொளியில் காணலாம்.



2)  பனைமலை யில் அழகிய பல்லவ காலத்து 1250 வருடங்கள் பழமையான ஓவியங்களைப்பற்றி திரு நாகசாமி தன்னுடைய ஓவியப்பாவை என்னும் புத்தகத்தில் விளக்கியிருப்பதை "தெரிந்த ஊர் தெரியாத விஷயம்" என்னும் தலைப்பில் காணலாம்.

3)  பழமொழிக்கதை : "இக்கரைக்கு அக்கரை பச்சை "

தை கீழறை (பிலவ) ஆண்டு, ஜனவரி 2022

 நல்வரவு

தை  மாத இதழை தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும். 

1 ) இந்த இதழில் முதல் பக்க சாதனையாளர்  புதுச்சேரியின் திரு கேசவசாமி.



பள்ளித்தலைமை ஆசிரியரும் தமிழ் ஆசிரியருமான இவர் ஏழு முறை இந்திய அரசால் ஜனாதிபதி விருதுகள் வெவ்வேறு காரணங்களுக்காக வழங்கப்பட்டுள்ளார்.  சமீபத்தில்  பத்மஸ்ரீ விருது பொம்மலாட்டக்கலைக்கு புத்துயிர்  கொடுத்த பெருமைக்காக வழங்கப்பட்டது.  மனித நேயம் மிகுந்த இவர் பசித்தவர்களின் பசியாற்றுவதையே தம் குறிக்கோளாக கொண்டவர். தற்போது முற்றிலும் இலவசமான முதியோர் இல்லத்தை பராமரிப்பதிலும் இளம் தலைமுறையினருக்கு இலவச பொம்மலாட்டக் கலையை சொல்லிக்கொடுப்பதிலும் தன்னுடைய சமூக சேவையை சிறப்பாக ஆற்றிவரும் அவருக்கு வேரும் தளிரும் தன்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. 

2) குமரி மாவட்டத்தில் பன்னிரெண்டு சிவாலயங்களை மகா சிவராத்திரி அன்று  ஓடிச் சென்றே வழிபடும் சிவாலய ஓட்டம் புகழ் பெற்றது.  இதில் கடக்க வேண்டிய தூரம் 110 கிமீ. அதன் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி இவ்விதழில் படிக்கலாம். 

3)  பழமொழிக் கதை : ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.  

Friday, December 17, 2021

மார்கழி கீழறை (பிலவ) ஆண்டு டிசம்பர் 2021

 நல்வரவு

மார்கழி  மாத இதழை தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும். 

1 ) இந்த இதழில் முதல் பக்க சாதனையாளர் அம்புலிமாமா  சங்கர்.


தம் ஆயுட்காலம் முழுவதும் ஒரே பத்திரிக்கைக்கு மனம் ஒன்றி  குழந்தைகளுக்கு ஒரு சேவையாக  செய்து  வாழ்ந்த அற்புத கலைஞர். 

அவரைப்பற்றியும் அம்புலிமாமாவின் சாதனைகளையும்  படித்தறியலாம்.

2)  வணிகம் செய்ய வந்தவர்களில் ஆங்கிலேயரையும் பிரஞ்சுக்காரர்கள் பற்றியும்  நாம் சரித்திர புத்தகங்களில் படித்திருக்கிறோம். 

       அதிகம் நமக்கு தெரியாதது டச்சுக்காரர்களின் வியாபார தொடர்பு
அவர்கள் கடலூர் அருகே தரங்கம்பாடியில்  ஒரு கோட்டையை கட்டி அங்கிருந்து வணிகம் செய்த விவரங்கள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் இப்போது கிடைக்கிறது. 



3)  சிறுவர் சிறுமியருக்கான கதைப்பகுதியின்  பழமொழி

"கேடுவரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே"

இவ்விதழின்  முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. நன்றி

Wednesday, November 17, 2021

கார்த்திகை , கீழறை (பிலவ) ஆண்டு, நவம்பர் 2021

 நல்வரவு

கார்த்திகை மாத இதழை தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும். 

இந்த இதழில் முதல் பக்க சாதனையாளர் திரு குற்றாலீஸ்வரன்.

நீச்சலில் அபார சாதனைகளை தன் மிக இளம் வயதிலேயே புரிந்த திரு குற்றாலீஸ்வரன்  அத்துறையை விட்டு  கல்வியில் கவனம் செலுத்தி இன்று முதலீட்டு அறிவுரையாளராக அமெரிக்க நாட்டில் தொழில் புரிகிறார்.

அவரது சாதனைகள் பற்றிய சிறிய காணொளி



மேலும் திருவிசை நல்லூர் கங்கை எழுந்தருளல் விழா மற்றும் பழமொழி கதையும்  இரண்டாம் பக்கத்தில் காணலாம்.

தங்களுடைய மேலான கருத்துகளுக்கு பின்னூட்டத்தை பயன்படுத்தவும்.
நன்றி

Saturday, October 16, 2021

ஐப்பசி, கீழறை, (பிலவ) ஆண்டு -அக்டோபர் -2021

நல்வரவு

1)  இம்மாத சாதனையாளர் தூய்மை பாரதம் படைப்பதில் ஒரு முன்னோடி, ஸ்ரீ மராச்சி சுப்புராமன். குறிப்பாக உலர் கழிவறைகளை வடிவமைப்பதில்  அவர் ஆற்றிய பணி மிகவும் பாராட்டுக்கு உரியது. அவரைப்பற்றிய காணொளி கீழே.  


2)  நவராத்திரி என்றாலே பொம்மைகள் -அவைகள் மூலம் நம் பாரம்பரியம் சரித்திரம் என சொல்லிக் கொண்டே போகலாம்.  அதனை  எத்தனை குடும்பங்கள் வாழ்வாதரமாகக் கொண்டுள்ளது என்பதை அறியும் போது எப்படி கலை, பண்பாடு மக்களின் வாழ்க்கையுடன் பிணைந்துள்ளது என்பதை அறிகிறோம்.  அப்படிப்பட்ட கிராமம் தான் மதுரை அருகில் உள்ள விளாச்சேரி என்னும் கிராமம்.



3) பழமொழிக் கதை : பேராசை பெரு நஷ்டம் 

பலரும் அறிந்த விறகு வெட்டி-தேவதைக் கதை. சிறுவர்களுக்கான பகுதி



வேரும் தளிரும் என்கிற இந்த இரண்டு பக்க சஞ்சிகையை தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சுட்டவும். 

மறக்காமல்  உங்கள் பின்னுட்டத்தையும் பதிவு செய்யவும்.

நன்றி

வைகாசி ஆனி ஆடி -நற்செய்கை (சுபகிருது) -2022

  நல்வரவு  வைகாசி இதழ் தரவிறக்கம்      1) பத்திரிகை ஜாம்பவான் ஜி  சுப்பிரமணி ஐயர்  2)  ஆடுதுறை -நெல் ஆராய்ச்சி மையம்  3)  தன்வினை தன்னைச்சுட...